முகப்பு | தொடக்கம் |
இரங்கு முரசின், இனம்சால் யானை |
137 |
இரங்கு முரசின், இனம்சால் யானை, |
|
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை |
|
இன்னும் ஓர் யான் அவா அறியேனே; |
|
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய |
|
5 |
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது, |
கழைக் கரும்பின் ஒலிக்குந்து, |
|
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும், |
|
கண் அன்ன மலர் பூக்குந்து, |
|
கருங் கால் வேங்கை மலரின், நாளும் |
|
10 |
பொன் அன்ன வீ சுமந்து, |
மணி அன்ன நீர் கடல் படரும்; |
|
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந! |
|
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை! |
|
நீ வாழியர்! நின் தந்தை |
|
15 |
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே! |
திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
| |
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.
|