முகப்பு | தொடக்கம் |
இருங் கடல் உடுத்த |
363 |
இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மா நிலம் |
|
உடையிலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி, |
|
தாமே ஆண்ட ஏமம் காவலர் |
|
இடு திரை மணலினும் பலரே; சுடு பிணக் |
|
5 |
காடு பதி ஆகப் போகி, தம்தம் |
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே; |
|
அதனால், நீயும் கேண்மதி அத்தை! வீயாது |
|
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; |
|
மடங்கல் உண்மை மாயமோ அன்றே; |
|
10 |
கள்ளி வேய்ந்த முள்ளிஅம் புறங்காட்டு, |
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், |
|
உப்பு இலாஅ அவிப் புழுக்கல் |
|
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது, |
|
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று, |
|
15 |
நிலம் கலனாக, இலங்கு பலி மிசையும் |
இன்னா வைகல் வாராமுன்னே, |
|
செய் நீ முன்னிய வினையே, |
|
முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...................... ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.
|