முகப்பு | தொடக்கம் |
இருப்பு முகஞ் செறித்த ஏந்து |
369 |
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின், |
|
கருங் கை யானை கொண்மூ ஆக, |
|
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த |
|
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த |
|
5 |
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக, |
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின், |
|
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக, |
|
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த |
|
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை. |
|
10 |
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக, |
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின் |
|
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால், |
|
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி, |
|
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ், |
|
15 |
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு, |
கண நரியோடு கழுது களம் படுப்ப, |
|
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ, |
|
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள! |
|
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி |
|
20 |
வேய்வை காணா விருந்தின் போர்வை |
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி, |
|
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று |
|
எழிலி தோயும் இமிழ் இசை அருவி, |
|
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன |
|
25 |
ஓடை நுதல, ஒல்குதல் அறியா, |
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த |
|
வேழ முகவை நல்குமதி |
|
தாழா ஈகைத் தகை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
| |
சேரமான் கடல் ஓட்டிய வெல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.
|