முகப்பு | தொடக்கம் |
இரும் பனை வெண் தோடு |
45 |
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; |
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; |
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு |
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; |
|
5 |
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; |
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், |
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் |
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு |
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
|