முகப்பு | தொடக்கம் |
இல்லாகியரோ, காலை மாலை! |
232 |
இல்லாகியரோ, காலை மாலை! |
|
அல்லாகியர், யான் வாழும் நாளே! |
|
நடுகல் பீலி சூட்டி, நார் அரி |
|
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்கொல்லோ |
|
5 |
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய |
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|