முகப்பு | தொடக்கம் |
இளையரும் முதியரும் |
254 |
இளையரும் முதியரும் வேறு புலம் படர, |
|
எடுப்ப எழாஅய், மார்பம் மண் புல்ல, |
|
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த |
|
வளை இல் வறுங் கை ஓச்சி, கிளையுள், |
|
5 |
'இன்னன் ஆயினன், இளையோன்' என்று, |
நின் உரை செல்லும் ஆயின், 'மற்று |
|
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து, |
|
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகன் |
|
வளனும் செம்மலும் எமக்கு' என, நாளும் |
|
10 |
ஆனாது புகழும் அன்னை |
யாங்கு ஆகுவள்கொல்? அளியள் தானே! |
|
திணையும் துறையும் அவை.
| |
...................கயமனார் பாடியது.
|