முகப்பு | தொடக்கம் |
எஃகு உளம் கழிய |
282 |
எஃகு உளம் கழிய, இரு நிலம் மருங்கின், |
|
அருங் கடன் இறுத்த பெருஞ் செயாளனை, |
|
'யாண்டு உளனோ?' என, வினவுதி ஆயின், |
|
............................................................................................. |
|
5 |
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம் |
அருங் கடன் இறுமார் வயவர் எறிய, |
|
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே; |
|
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழியத் |
|
....................................................................................... |
|
10 |
அலகை போகிச் சிதைந்து வேறாகிய |
பலகை அல்லது, களத்து ஒழியாதே; |
|
சேண் விளங்கு நல் இசை நிறீஇ, |
|
நா நவில் புலவர் வாய் உளானே. |
|
திணை ...................
| |
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.
|