முகப்பு | தொடக்கம் |
எம் கோன் இருந்த |
54 |
எம் கோன் இருந்த கம்பலை மூதூர், |
|
உடையோர் போல இடையின்று குறுகி, |
|
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல் |
|
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே; |
|
5 |
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து, |
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு |
|
ஆனாது ஈயும் கவி கை வண்மைக் |
|
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த |
|
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை, |
|
10 |
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி, |
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன் |
|
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப் |
|
புலி துஞ்சு வியன் புலத்தற்றே |
|
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.
|