முகப்பு | தொடக்கம் |
எறி புனக் குறவன் |
231 |
எறி புனக் குறவன் குறையல் அன்ன |
|
கரி புற விறகின் ஈம ஒள் அழல், |
|
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று, |
|
விசும்புற நீளினும் நீள்க பசுங் கதிர்த் |
|
5 |
திங்கள் அன்ன வெண்குடை |
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|