முகப்பு | தொடக்கம் |
என்னை புற்கை உண்டும் |
84 |
என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே; |
|
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே; |
|
போர் எதிர்ந்து என்னை போர்க் களம் புகினே, |
|
கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண், |
|
5 |
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு |
உமணர் வெரூஉம் துறையன்னன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|