முகப்பு | தொடக்கம் |
வல்லார் ஆயினும் |
57 |
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், |
|
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, |
|
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! |
|
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின், |
|
5 |
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு |
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க; |
|
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க; |
|
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் |
|
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம் |
|
10 |
கடிமரம் தடிதல் ஓம்பு நின் |
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே. |
|
திணை வஞ்சி; துறை துணை வஞ்சி.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|