முகப்பு | தொடக்கம் |
வலம் படு வாய்வாள் ஏந்தி |
91 |
வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் |
|
களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை, |
|
ஆர் கலி நறவின், அதியர் கோமான்! |
|
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி! |
|
5 |
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி |
நீலமணி மிடற்று ஒருவன் போல |
|
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப் |
|
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட |
|
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது, |
|
10 |
ஆதல் நின் அகத்து அடக்கி, |
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.
|