முகப்பு | தொடக்கம் |
வாழும் நாளோடு யாண்டு |
159 |
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின், |
|
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து, |
|
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி, |
|
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று, |
|
5 |
முன்றில் போகா முதிர்வினள் யாயும்; |
பசந்த மேனியொடு படர் அட வருந்தி, |
|
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள் |
|
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து, |
|
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த |
|
10 |
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று, |
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று, |
|
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து, |
|
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா, |
|
துவ்வாளாகிய என் வெய்யோளும்; |
|
15 |
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் |
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை, |
|
ஐவனம் வித்தி, மையுறக் கவினி, |
|
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக் |
|
கருவி வானம் தலைஇ யாங்கும், |
|
20 |
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என், |
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப |
|
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும், |
|
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ |
|
இன்புற விடுதிஆயின், சிறிது |
|
25 |
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண! |
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் |
|
வசை இல் விழுத் திணைப் பிறந்த |
|
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே. |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
அவனை அவர் பாடியது.
|