முகப்பு | தொடக்கம் |
விளை பதச் சீறிடம் நோக்கி |
190 |
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர் |
|
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும் |
|
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம் |
|
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு |
|
5 |
இயைந்த கேண்மை இல்லாகியரோ! |
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென, |
|
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள், |
|
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து, |
|
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் |
|
10 |
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து |
உரனுடையாளர் கேண்மையொடு |
|
இயைந்த வைகல் உள ஆகியரோ! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நல்லுருத்திரன் பாட்டு.
|