முகப்பு | தொடக்கம் |
ஒருவனை ஒருவன் அடுதலும் |
76 |
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், |
|
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; |
|
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை |
|
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர் |
|
5 |
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, |
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி, |
|
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி, |
|
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக, |
|
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன் |
|
10 |
பீடும் செம்மலும் அறியார் கூடி, |
'பொருதும்' என்று தன்தலை வந்த |
|
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க, |
|
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக் குன்றூர் கிழார் பாடியது.
|