முகப்பு | தொடக்கம் |
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் |
176 |
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் |
|
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின், |
|
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத் |
|
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம், |
|
5 |
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின், |
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ் |
|
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை |
|
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே! |
|
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர் |
|
10 |
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல, |
காணாது கழிந்த வைகல், காணா |
|
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன் |
|
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|