முகப்பு | தொடக்கம் |
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் |
295 |
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண், |
|
வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரி, |
|
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின், |
|
வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி, |
|
5 |
இடைப் படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, |
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி, |
|
வாடு முலை ஊறிச் சுரந்தன |
|
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே. |
|
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
| |
ஒளவையார் பாடியது.
|