முகப்பு | தொடக்கம் |
கதிர் மூக்கு ஆரல் |
249 |
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப, |
|
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, |
|
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் |
|
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர, |
|
5 |
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, |
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், |
|
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் |
|
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, |
|
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, |
|
10 |
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி |
|
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி, |
|
அழுதல் ஆனாக் கண்ணள், |
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
|