முகப்பு | தொடக்கம் |
கந்து முனிந்து உயிர்க்கும் |
178 |
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பணை முனிந்து |
|
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண், |
|
மணல் மலி முற்றம் புக்க சான்றோர் |
|
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று, |
|
5 |
'உண்ம்' என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன் |
ஈண்டோ இன் சாயலனே; வேண்டார் |
|
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின், |
|
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய |
|
நெடுமொழி மறந்த சிறு பேராளர் |
|
10 |
அஞ்சி நீங்கும்காலை, |
ஏமமாகத் தான் முந்துறுமே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
| |
பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது.
|