கல் முழை அருவிப்

147
கல் முழை அருவிப் பல் மலை நீந்தி,
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை,
கார் வான் இன் உறை தமியள் கேளா,
நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும்
5
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை
நெய்யொடு துறந்த மை இருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி,
புது மலர் கஞல, இன்று பெயரின்,
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

திணையும் துறையும் அவை.
அவள் காரணமாக அவனைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.