முகப்பு | தொடக்கம் |
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! இருள் |
228 |
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! |
|
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை |
|
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை, |
|
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! |
|
5 |
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்? |
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப் |
|
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை, |
|
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன |
|
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் |
|
10 |
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் |
தேவர் உலகம் எய்தினன்ஆதலின், |
|
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி |
|
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம் |
|
இரு நிலம் திகிரியா, பெரு மலை |
|
15 |
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? |
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
| |
அவனை ஐயூர் முடவனார் பாடியது.
|