முகப்பு | தொடக்கம் |
களர்ப் படு கூவல் தோண்டி |
311 |
களர்ப் படு கூவல் தோண்டி, நாளும், |
|
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை. |
|
தாது எரு மறுகின் மாசுண இருந்து, |
|
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு |
|
5 |
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்து; |
சிறப்புடைச் செங் கண் புகைய, ஓர் |
|
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே. |
|
திணை அது; துறை பாண்பாட்டு.
| |
ஒளவையார் பாடியது.
|