முகப்பு | தொடக்கம் |
களிறு கடைஇய தாள் |
7 |
களிறு கடைஇய தாள், |
|
கழல் உரீஇய திருந்து அடி, |
|
கணை பொருது கவி வண் கையால், |
|
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து, |
|
5 |
மா மறுத்த மலர் மார்பின், |
தோல் பெயரிய எறுழ் முன்பின், |
|
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் |
|
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக் |
|
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல |
|
10 |
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ! |
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து |
|
மீனின் செறுக்கும் யாணர்ப் |
|
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை; மழபுல வஞ்சியும் ஆம்.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
|