முகப்பு | தொடக்கம் |
கறங்கு மிசை அருவிய |
148 |
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின் |
|
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி, |
|
நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து, |
|
கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப; |
|
5 |
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி, |
செய்யா கூறிக் கிளத்தல் |
|
எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
கண்டீரக் கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.
|