கறங்கு வெள் அருவி

252
கறங்கு வெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,
அள் இலைத் தாளி கொய்யுமோனே
இல் வழங்கு மட மயில் பிணிக்கும்
5
சொல் வலை வேட்டுவன் ஆயினன், முன்னே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.