முகப்பு | தொடக்கம் |
கீழ் நீரான் மீன் |
396 |
கீழ் நீரான் மீன் வழங்குந்து; |
|
மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து; |
|
கழி சுற்றிய விளை கழனி, |
|
அரிப் பறையான் புள் ஓப்புந்து; |
|
5 |
நெடுநீர் கூஉம் மணல் தண் கான் |
மென் பறையான் புள் இரியுந்து; |
|
நனைக் கள்ளின் மனைக் கோசர் |
|
தீம் தேறல் நறவு மகிழ்ந்து, |
|
தீம் குரவைக் கொளைத் தாங்குந்து; |
|
10 |
உள் இலோர்க்கு வலி ஆகுவன், |
கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன், |
|
கழுமிய வென் வேல் வேளே, |
|
வள நீர் வாட்டாற்று எழினியாதன்; |
|
கிணையேம், பெரும! |
|
15 |
கொழுந் தடிய சூடு என்கோ? |
வள நனையின் மட்டு என்கோ? |
|
குறு முயலின் நிணம் பெய்தந்த |
|
நறு நெய்ய சோறு என்கோ? |
|
திறந்து மறந்த கூட்டுமுதல் |
|
20 |
முகந்து கொள்ளும் உணவு என்கோ? |
அன்னவை பல பல |
|
...................................................ருநதய |
|
இரும் பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய |
|
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை; |
|
25 |
எம்மோர் ஆக்கக் கங்குண்டே; |
மாரி வானத்து மீன் நாப்பண், |
|
விரி கதிர வெண் திங்களின், |
|
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல் இசை! |
|
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும் |
|
30 |
நிரைசால் நன் கலன் நல்கி, |
உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே! |
|
திணையும் துறையும் அவை.
| |
வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.
|