முகப்பு | தொடக்கம் |
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு |
150 |
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன |
|
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி, |
|
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என் |
|
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி, |
|
5 |
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால், |
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி, |
|
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன், |
|
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ, |
|
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை, |
|
10 |
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே |
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத் |
|
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின் |
|
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின், |
|
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, |
|
15 |
நல் மரன் நளிய நறுந் தண் சாரல், |
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி, |
|
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே, |
|
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம் |
|
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என, |
|
20 |
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் |
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்; |
|
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்; |
|
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்; |
|
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே |
|
25 |
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி |
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின், |
|
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர், |
|
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|