முகப்பு | தொடக்கம் |
கையது வேலே |
100 |
கையது வேலே; காலன புனை கழல்; |
|
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்; |
|
வட்கர் போகிய வளர் இளம் போந்தை |
|
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, |
|
5 |
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ, |
சுரி இரும் பித்தை பொலியச் சூடி, |
|
வரிவயம் பொருத வயக் களிறு போல, |
|
இன்னும் மாறாது சினனே; அன்னோ! |
|
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே; |
|
10 |
செறுவர் நோக்கிய கண், தன் |
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே. |
|
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
| |
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
|