முகப்பு | தொடக்கம் |
கொடுவரி வழங்கும் |
135 |
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை, |
|
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி, |
|
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின், |
|
வளைக் கை விறலி என் பின்னள் ஆக, |
|
5 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் |
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப, |
|
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் |
|
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ, |
|
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
வந்தனென் எந்தை! யானே: என்றும், |
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு |
|
கறை அடி யானை இரியல் போக்கும் |
|
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்! |
|
களிறும் அன்றே; மாவும் அன்றே; |
|
15 |
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே; |
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர், |
|
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப் |
|
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு, |
|
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக் |
|
20 |
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் |
உறு முரண் கடந்த ஆற்றல் |
|
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடியது.
|