முகப்பு | தொடக்கம் |
கொண்டைக் கூழைத் |
61 |
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் |
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், |
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட |
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல் |
|
5 |
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, |
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, |
|
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் |
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் |
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் |
|
10 |
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து |
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும், |
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், |
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, |
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், |
|
15 |
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் |
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் |
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, |
|
திருந்து அடி பொருந்த வல்லோர் |
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|