முகப்பு | தொடக்கம் |
கோதை மார்பின் கோதையானும் |
48 |
கோதை மார்பின் கோதையானும், |
|
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும், |
|
மாக் கழி மலர்ந்த நெய்தலானும், |
|
கள் நாறும்மே, கானலம் தொண்டி; |
|
5 |
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்; |
அன்னோற் படர்தியாயின், நீயும் |
|
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல! |
|
'அமர் மேம்படூஉம் காலை, நின் |
|
புகழ் மேம்படுநனைக் கண்டனம்' எனவே. |
|
திணை பாடாண் திணை; துறை புலவராற்றுப் படை.
| |
சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.
|