முகப்பு | தொடக்கம் |
சிலை உலாய் நிமிர்ந்த |
394 |
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின், |
|
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன், |
|
வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன், |
|
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும், |
|
5 |
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்! |
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை, |
|
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை |
|
வாடா வஞ்சி பாடினேனாக, |
|
10 |
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி, |
கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின் |
|
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி |
|
யான் அது பெயர்த்தனெனாக, தான் அது |
|
சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர் |
|
15 |
பெருங் களிறு நல்கியோனே; அதற்கொண்டு, |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும், |
|
'துன் அரும் பரிசில் தரும்' என, |
|
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே. |
|
திணையும் துறையும் அவை. |
|
கடைநிலை ஆயின எல்லாம் பாடாண் திணை.
| |
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|