செருப்பு இடைச் சிறு பரல்

257
செருப்பு இடைச் சிறு பரல் அன்னன்; கணைக் கால்,
அவ் வயிற்று, அகன்ற மார்பின், பைங் கண்,
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்,
செவி இறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு,
5
யார்கொலோ, அளியன்தானே? தேரின்
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே; அரண் எனக்
காடு கைக் கொண்டன்றும், இலனே; காலை,
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி,
கையின் சுட்டிப் பையென எண்ணி,
10
சிலையின் மாற்றியோனே; அவைதாம்
மிகப் பலவாயினும், என் ஆம் எனைத்தும்
வெண் கோள் தோன்றாக் குழிசியொடு,
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே?

திணை வெட்சி; துறை உண்டாட்டு.
.............................................................................