தீம் கனி இரவமொடு

281
தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ,
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க,
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி,
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
5
இசை மணி எறிந்து, காஞ்சி பாடி,
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ,
காக்கம் வம்மோ காதலம் தோழி!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே.

திணை காஞ்சி; துறை பேய்க்காஞ்சி.
அரிசில் கிழார் பாடியது.