முகப்பு | தொடக்கம் |
தூங்கு கையான் |
22 |
தூங்கு கையான் ஓங்கு நடைய, |
|
உறழ் மணியான் உயர் மருப்பின, |
|
பிறை நுதலான் செறல் நோக்கின, |
|
பா அடியான் பணை எருத்தின, |
|
5 |
தேன் சிதைந்த வரை போல, |
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து, |
|
அயறு சோரும் இருஞ் சென்னிய, |
|
மைந்து மலிந்த மழ களிறு |
|
கந்து சேர்பு நிலைஇ வழங்க; |
|
10 |
பாஅல் நின்று கதிர் சோரும் |
வான் உறையும் மதி போலும் |
|
மாலை வெண் குடை நீழலான், |
|
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க; |
|
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த |
|
15 |
ஆய் கரும்பின் கொடிக் கூரை, |
சாறு கொண்ட களம் போல, |
|
வேறு வேறு பொலிவு தோன்ற; |
|
குற்று ஆனா உலக்கையான் |
|
கலிச் சும்மை வியல் ஆங்கண், |
|
20 |
பொலந் தோட்டுப் பைந் தும்பை |
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ, |
|
சின மாந்தர் வெறிக் குரவை |
|
ஓத நீரின் பெயர்பு பொங்க; |
|
வாய் காவாது பரந்து பட்ட |
|
25 |
வியன் பாசறைக் காப்பாள! |
வேந்து தந்த பணி திறையான் |
|
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், |
|
ஓங்கு கொல்லியோர், அடு பொருந! |
|
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்! |
|
30 |
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே, |
நிற் பாடிய வயங்கு செந் நாப் |
|
பின் பிறர் இசை நுவலாமை, |
|
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! |
|
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே |
|
35 |
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து, |
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை, |
|
வேறு புலத்து இறுக்கும் தானையொடு, |
|
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே! |
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
| |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
|