முகப்பு | தொடக்கம் |
தென் பரதவர் மிடல் சாய |
378 |
தென் பரதவர் மிடல் சாய, |
|
வட வடுகர் வாள் ஓட்டிய, |
|
தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக் கை, |
|
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின், |
|
5 |
நல் தார், கள்ளின், சோழன் கோயில், |
புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து, |
|
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என் |
|
அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி, |
|
எஞ்சா மரபின் வஞ்சி பாட, |
|
10 |
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, |
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை |
|
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு, |
|
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல், |
|
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும், |
|
15 |
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும், |
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும், |
|
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும், |
|
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை |
|
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, |
|
20 |
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் |
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு, |
|
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே |
|
இருங் கிளைத் தலைமை எய்தி, |
|
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது.
|