முகப்பு | தொடக்கம் |
தேஎம் தீம் தொடைச் |
70 |
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண! |
|
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன |
|
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை |
|
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி; |
|
5 |
வினவல் ஆனா முது வாய் இரவல! |
தைஇத் திங்கள் தண் கயம் போல, |
|
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர், |
|
அடுதீ அல்லது சுடுதீ அறியாது; |
|
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன், |
|
10 |
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி, |
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை |
|
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் |
|
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப் |
|
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல், |
|
15 |
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச் |
செல்வைஆயின், செல்வை ஆகுவை; |
|
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் |
|
தலைப்பாடு அன்று, அவன் ஈகை; |
|
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|