முகப்பு | தொடக்கம் |
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் |
180 |
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; |
|
'இல்' என மறுக்கும் சிறுமையும் இலனே; |
|
இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து |
|
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து, |
|
5 |
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி, |
வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து, |
|
ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்; |
|
இன்மை தீர வேண்டின், எம்மொடு |
|
நீயும் வம்மோ? முது வாய் இரவல! |
|
10 |
யாம் தன் இரக்கும்காலை, தான் எம் |
உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க் |
|
கருங் கைக் கொல்லனை இரக்கும், |
|
'திருந்து இலை நெடு வேல் வடித்திசின்' எனவே. |
|
திணையும் துறையும் அவை; துறை பாணாற்றுப் படையும் ஆம்.
| |
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|