நிறப் படைக்கு ஒல்கா யானை

293
நிறப் படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண் உடை மாக்கட்கு இரங்குமாயின்,
எம்மினும் பேர் எழில் இழந்து, வினை எனப்
5
பிறர் மனை புகுவள்கொல்லோ
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!

திணை காஞ்சி; துறை பூக்கோட் காஞ்சி.
நொச்சி நியமங் கிழார் பாடியது.