முகப்பு | தொடக்கம் |
நின் நயந்து உறைநர்க்கும் |
163 |
நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும், |
|
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும், |
|
கடும்பின் கடும் பசி தீர யாழ நின் |
|
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும், |
|
5 |
இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது, |
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும் |
|
எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே! |
|
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன் |
|
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே. |
|
திணை அது; துறை பரிசில்
| |
பெருஞ் சித்திரனார் குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது.
|