முகப்பு | தொடக்கம் |
நீண்டு ஒலி அழுவம் |
161 |
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு, |
|
ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ, |
|
பெரு மலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு, |
|
உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து, |
|
5 |
வள மழை மாறிய என்றூழ்க் காலை, |
மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக் |
|
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு, |
|
எமக்கும் பிறர்க்கும் செம்மலைஆகலின், |
|
'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர, |
|
10 |
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று, |
வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு, |
|
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர' எனக் |
|
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து, |
|
அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின் |
|
15 |
தாள் படு செல்வம் காண்தொறும் மருள, |
பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய |
|
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, |
|
ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில் |
|
படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து, |
|
20 |
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்! |
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி! |
|
வல்லினும், வல்லேன்ஆயினும், வல்லே, |
|
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த |
|
25 |
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும் |
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப் |
|
பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம் |
|
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல, |
|
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின் |
|
30 |
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப, |
வாள் அமர் உழந்த நின் தானையும், |
|
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.
|