முகப்பு | தொடக்கம் |
நீயே, அமர் காணின் |
167 |
நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர் |
|
படை விலக்கி எதிர் நிற்றலின், |
|
வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு, |
|
கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே: |
|
5 |
அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின், |
ஊறு அறியா மெய் யாக்கையொடு, |
|
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே: |
|
அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்; |
|
ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க் |
|
10 |
கழல் புனை திருந்து அடிக் கடு மான் கிள்ளி! |
நின்னை வியக்கும் இவ் உலகம்; அஃது |
|
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே. |
|
திணை அது; துறை அரச வாகை.
| |
ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|