முகப்பு | தொடக்கம் |
நீயே, பிறர் ஓம்புறு |
40 |
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில் |
|
ஓம்பாது கடந்து அட்டு, அவர் |
|
முடி புனைந்த பசும் பொன் நின் |
|
அடி பொலியக் கழல் தைஇய |
|
5 |
வல்லாளனை; வய வேந்தே! |
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க, |
|
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, |
|
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும் |
|
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும! |
|
10 |
ஒரு பிடி படியும் சீறிடம் |
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.
|