முகப்பு | தொடக்கம் |
நீர் அறவு அறியா |
271 |
நீர் அறவு அறியா நிலமுதல் கலந்த |
|
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை, |
|
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல், |
|
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே, |
|
5 |
வெருவரு குருதியொடு மயங்கி, உருவு கரந்து, |
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்து, |
|
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் |
|
மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே! |
|
திணை நொச்சி; துறை செருவிடை வீழ்தல்.
| |
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
|