முகப்பு | தொடக்கம் |
நீர் மிகின் சிறையும் இல்லை |
51 |
நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின், |
|
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை; |
|
வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு |
|
அவற்று ஓர் அன்ன சினப் போர் வழுதி, |
|
5 |
'தண் தமிழ் பொது' எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, |
கொண்டி வேண்டுவன் ஆயின், 'கொள்க' எனக் |
|
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே; |
|
அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே |
|
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த |
|
10 |
செம் புற்று ஈயல் போல, |
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே! |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.
|