முகப்பு | தொடக்கம் |
பாறுபடப் பறைந்த பல் மாறு |
359 |
பாறுபடப் பறைந்த பல் மாறு மருங்கின், |
|
வேறு படு குரல வெவ் வாய்க் கூகையொடு, |
|
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல, |
|
பேஎய் மகளிர் பிணம் தழூஉப் பற்றி, |
|
5 |
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர், |
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி, |
|
ஈம விளக்கின் வெருவரப் பேரும் |
|
காடு முன்னினரே, நாடு கொண்டோரும்; |
|
நினக்கும் வருதல் வைகல் அற்றே; |
|
10 |
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; |
அதனால், வசை நீக்கி இசை வேண்டியும், |
|
நசை வேண்டாது நன்று மொழிந்தும், |
|
நிலவுக் கோட்டுப் பல களிற்றொடு, |
|
பொலம் படைய மா மயங்கிட, |
|
15 |
இழை கிளர் நெடுந் தேர் இரவலர்க்கு அருகாது, |
'கொள்' என விடுவை ஆயின், வெள்ளென, |
|
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும், |
|
ஈண்டு நீடு விளங்கும், நீ எய்திய புகழே. |
|
திணை அது; துறை பெருங்காஞ்சி.
| |
அந்துவன் கீரனைக் காவட்டனார் பாடியது.
|