முகப்பு | தொடக்கம் |
பெரிது ஆராச் சிறு சினத்தர் |
360 |
பெரிது ஆராச் சிறு சினத்தர், |
|
சில சொல்லான் பல கேள்வியர், |
|
நுண் உணர்வினான் பெருங் கொடையர், |
|
கலுழ் நனையான் தண் தேறலர், |
|
5 |
கனி குய்யான் கொழுந் துவையர், |
தாழ் உவந்து தழூஉ மொழியர், |
|
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி, |
|
ஏமம் ஆக இந் நிலம் ஆண்டோர் |
|
சிலரே; பெரும! கேள், இனி: நாளும், |
|
10 |
பலரே, தகையஃது அறியாதோரே; |
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; |
|
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால், |
|
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் |
|
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சு வரப் |
|
15 |
பாறு இறை கொண்ட பறந்தலை, மா கத |
கள்ளி போகிய களரி மருங்கின், |
|
வெள்ளில் நிறுத்த பின்றை, கள்ளொடு |
|
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி, |
|
புலையன் ஏவ, புல் மேல் அமர்ந்து உண்டு, |
|
20 |
அழல் வாய்ப் புக்க பின்னும், |
பலர் வாய்த்து இராஅர், பருத்து உண்டோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தந்துமாறனைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடியது.
|