முகப்பு | தொடக்கம் |
போர்க்கு உரைஇப் |
97 |
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், |
|
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், |
|
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே; |
|
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர் |
|
5 |
நறுங் கள்ளின் நாடு நைத்தலின், |
சுரை தழீஇய இருங் காழொடு |
|
மடை கலங்கி நிலை திரிந்தனவே; |
|
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் |
|
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், |
|
10 |
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே; |
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர் |
|
பொலம் பைந் தார் கெடப் பரிதலின், |
|
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே; |
|
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் |
|
15 |
பொலந் தும்பைக் கழல் பாண்டில் |
கணை பொருத துளைத் தோலன்னே. |
|
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள், |
|
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் |
|
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு |
|
20 |
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின், |
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச் |
|
சொல்லவும் தேறீராயின், மெல் இயல், |
|
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி, |
|
குறுந் தொடி மகளிர் தோள் விடல் |
|
25 |
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே. |
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|