முகப்பு | தொடக்கம் |
மடத் தகை மா மயில் |
145 |
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி, |
|
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை, |
|
கடாஅ யானைக் கலி மான் பேக! |
|
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே; |
|
5 |
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ் |
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி, |
|
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என, |
|
இஃது யாம் இரந்த பரிசில்: அஃது இருளின், |
|
இன மணி நெடுந் தேர் ஏறி, |
|
10 |
இன்னாது உறைவி அரும் படர் களைமே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாக அவர் பாடியது.
|