முகப்பு | தொடக்கம் |
மண் முழா மறப்ப |
65 |
மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப, |
|
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப, |
|
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப, |
|
உழவர் ஓதை மறப்ப, விழவும் |
|
5 |
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, |
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து, |
|
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் |
|
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு, |
|
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த |
|
10 |
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன் |
வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு, |
|
நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே. |
|
திணை பொதுவியல்; துறை கையறு நிலை.
| |
சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.
|